என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புதுவை கடலில் செயற்கை மணல் பரப்பு"
புதுச்சேரி:
புதுவை கடற்கரையில் தலைமை செயலகம் எதிரில் செயற்கை மணல் பரப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மணல் பரப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கூம்பு வடிவத்தில் 120 மீட்டர் நீளத்திற்கு அலைகளின் ஓட்டத்தை தடுத்து மணலை சேகரிக்கும் வகையில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டு கடலுக்குள் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிக்கு முன்பாக 100 மீட்டர் அளவுக்கு கடலுக்குள் கற்கள் கொட்டப்பட்டது. இந்த கற்கள் கொட்டப்பட்டதால் தலைமை செயலகம் எதிரில் இருந்து காந்தி சிலை வரை மணல் பரப்பு உருவாக ஆரம்பித்தது.
கூம்பு வடிவ அமைப்பு ஆழ்த்தப்பட்ட பிறகு தற்போது பெரியளவில் செயற்கை மணல் பரப்பு உருவாகியுள்ளது.
சமீபத்தில் விநாயகர் சிலைகள் கரைக்கப் பட்டதால் சிலைகளுக்கு போடப்பட்டிருந்த மாலை, தேங்காய் சிதறல்கள் கரையில் ஒதுங்கியுள்ளது. புதிதாக தோன்றியுள்ள பெரிய மணல் பரப்பு சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளது.
ஏற்கனவே கடந்த மாதத்தில் செயற்கை மணல் பரப்பில் இறங்கி கடலில் குளித்த 2 பள்ளி மாணவர்கள் இறந்தனர். சுற்றுலா பயணிகளும் மரணமடைந்தனர். இதனால் அங்கு கண்காணிப்பு கோபுரம் அமைத்து கடலுக்குள் பொதுமக்கள் இறங்காதவாறு கண்காணித்தனர். அதையும் மீறி கடல் அலையில் சிக்கியவர்களை மீட்கவும் தயார் நிலையில் உள்ளனர்.
இதற்கிடையில் தலைமை செயலகம் எதிரில் இருந்து டூப்ளே சிலை வரை உள்ள கடற்கரை சாலை முழுவதும் நிரந்தரமாக 100 அடி இடைவெளியில் காவல் துறையின் எச்சரிக்கை பலகை அமைக்கப்பட்டுள்ளது. அதில் இந்த கடல் ஆழமான பகுதி, விபரீதமான விளையாட்டு வேண்டாம் என ஆங்கிலம், தமிழில் எழுதி வைத்துள்ளனர். அவசர உதவிக்கான எண்ணும் அதில் இடம்பெற்றுள்ளது.
மொகரம் பண்டிகையையொட்டி தமிழகம், பிற மாநிலங்களில் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளதால் புதுவைக்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்தனர். கடற்கரையில் செயற்கை மணல் பரப்பில் கால் நனைத்து விளையாடினர். சிலர் எச்சரிக்கையை மீறி கடலில் இறங்கி குளித்தனர்.